அதிகாரம் / Chapter 121
திருக்குறள் 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அவர் நம்மை நினைப்பவர்போன்று நினையார் கொல்லோ: தும்மல் தோன்றுவதுபோன்று கெடாநின்றது. தலைமகள் உலகத்துப் பெண்டிராயுள்ளார் கூறுவதொன்றை ஈண்டுக் கூறினாள்.
பரிமேலழகர்
தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்‘ர் போன்று நினையாராகல் வேண்டும். விளக்கம் (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக் கொண்ட வினை முடிவது போன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.)
English explanation
A fit of sneezing threatened, but it passed away;He seemed to think of me, but do his fancies stray
I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not.