அதிகாரம் / Chapter 121
திருக்குறள் 1202
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று ஏல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந் நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். விளக்கம் (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)
English explanation
How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief
Even to think of one's beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.