அதிகாரம் / Chapter 121
திருக்குறள் 1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.
பரிமேலழகர்
தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் - முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அது பொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து. விளக்கம் (தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு.)
English explanation
From thought of her unfailing gladness springs,Sweeter than palm-rice wine the joy love brings
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.