அதிகாரம் / Chapter 44

திருக்குறள் 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் த்ரூஉம் பகை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான். இது குற்றங் கடிய வேண்டு மென்றது.

பரிமேலழகர்

அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும். விளக்கம் (இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாரா மையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றமே அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது "அரும்பண்பினால் தீமை காக்க," என்பதுபோல நின்றது.)

English explanation

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.