அதிகாரம் / Chapter 44
திருக்குறள் 433
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.
பரிமேலழகர்
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக்' கொள்வர். விளக்கம் ('குற்றம்' சாதிப் பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமல் காப்பர் என்பதாம்.)
English explanation
Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree.