அதிகாரம் / Chapter 108
திருக்குறள் 1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மனையகத்திருந்து பொற்புடையராகிய பெண்டிரைக் காணின், அவரினும் மிகப் பொற்புடையாராய் அதனைப் பெற்றேமென்று இறுமாப்பர் கயவர். இது நிறையிலரென்றது.
பரிமேலழகர்
கீழ்-கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். விளக்கம் (அகப்பட்டி; அகமாகிய பட்டி; பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார்; ''நோதக்க செய்யும் சிறுபட்டி'' (கலித். குறிஞ்சி.15) என்றார் பிறரும்.)
English explanation
When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile
The base feels proud when he sees persons whose acts meaner than his own.