அதிகாரம் / Chapter 118
திருக்குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது. இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. எமக்கு அந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது - எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒஇனிதே - மிகவும் இனிதாயிற்று! விளக்கம் ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச் சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.)
English explanation
Oho! how sweet a thing to see! the eyeThat wrought this pain, in the same gulf doth lie
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.