அதிகாரம் / Chapter 6
திருக்குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்நன்கலம் நன்மக்கட் பேறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிமேலழகர்
மங்கலம் என்ப மனை மாட்சி-ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு-அவை தமக்கு நல்ல அணிகலன் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. விளக்கம் ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)
English explanation
The house's 'blessing', men pronounce the house-wife excellent;The gain of blessed children is its goodly ornament
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.