அதிகாரம் / Chapter 7
திருக்குறள் 61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கட்பேறு அல்ல பிற.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.
பரிமேலழகர்
பெறுமவற்றுள்-ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற-அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களை பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை-யாம் மதிப்பது இல்லை. விளக்கம் ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத் 'துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தில் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
Of all that men acquire, we know not any greater gain,Than that which by the birth of learned children men obtain
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.