அதிகாரம் / Chapter 7

திருக்குறள் 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல் எனும் சொல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.

பரிமேலழகர்

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி- கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது: இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும்சொல்-தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். விளக்கம் ('சொல்' என்பது நிகழ்த்துதல் ஆகிய தன் காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல்-அங்ஙனம் தோன்ற ஒழுகல். இதனால் புதல்வன் கடன் கூறப்பட்டது.)

English explanation

To sire, what best requital can by grateful child be done?To make men say, 'What merit gained the father such a son?'

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.