அதிகாரம் / Chapter 51
திருக்குறள் 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
பரிமேலழகர்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர்; பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். விளக்கம் ['பற்று இலர்' என்பதனால் 'சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.]
English explanation
Beware of trusting men who have no kith of kin;No bonds restrain such men, no shame deters from sin
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.