அதிகாரம் / Chapter 120

திருக்குறள் 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.

பரிமேலழகர்

'அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்,' என்ற தோழிக்குச் சொல்லியது. நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. விளக்கம் (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே,' என்பதாம்.)

English explanation

From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?