அதிகாரம் / Chapter 120
திருக்குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர். இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
பரிமேலழகர்
'காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி,' என்ற தோழிக்குச் சொல்லியது. வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர். விளக்கம் (சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை; நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையேற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை,' என்பதாம்.)
English explanation
Those well-beloved will luckless prove,Unless beloved by those they love
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.