அதிகாரம் / Chapter 120
திருக்குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும். இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. விளக்கம் (நாம் அவரான் விழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
English explanation
Who love and are beloved to them aloneBelongs the boast, 'We've made life's very joys our own.'
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).