அதிகாரம் / Chapter 120
திருக்குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக் கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. விளக்கம் (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா - ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ?' என்பதாம்.)
English explanation
Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.