அதிகாரம் / Chapter 120
திருக்குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
பரிமேலழகர்
இதுவும் அது. ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான் கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ! விளக்கம் ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான்; இனி யான் உய்யுமாற என்னை?' என்பதாம்.)
English explanation
While Kaman rushes straight at me alone,Is all my pain and wasting grief unknown
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?