அதிகாரம் / Chapter 53

திருக்குறள் 529

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

முன்பு தனக்குத் தமராகி வைத்துத் தன்னை விட்டுப் போனவர் பின்பு வந்து சுற்றமாதல் அவர்மாட்டு அமராமைக்குக் காரணம் இன்றி யொழுக வரும். இது தன்னை விட்டுப்போன இராஜபுத்திரரைக் கூட்டிக் கொள்ளுமாறு கூறிற்று.

பரிமேலழகர்

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும் - அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம். விளக்கம் ['அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்து கொள்ள வேண்டா; பழைய இயல்பாய் நிற்கும் என்பார், 'வரும்' என்றார்.]

English explanation

Who once were his, and then forsook him, as beforeWill come around, when cause of disagreement is no more

Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.