அதிகாரம் / Chapter 53
திருக்குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
பரிமேலழகர்
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். விளக்கம் [உயர்ந்தார் நீக்குதல் நோக்கியபோது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.]
English explanation
Where king regards not all alike, but each in his degree,'Neath such discerning rule many dwell happily
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.