அதிகாரம் / Chapter 94

திருக்குறள் 938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.

பரிமேலழகர்

சூது-சூது; பொருள் கெடுத்து-தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ-பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும் . இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். விளக்கம் (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும்; தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும், ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)

English explanation

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives awayAll grace, and leaves the man to utter misery a prey

Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).