அதிகாரம் / Chapter 7
திருக்குறள் 67
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்துமுந்தி இருப்பச் செயல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
பரிமேலழகர்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி-தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல்-கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். விளக்கம் (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)
English explanation
Sire greatest boon on son confers, who makes him meet,In councils of the wise to fill the highest seat
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.