அதிகாரம் / Chapter 7
திருக்குறள் 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.
பரிமேலழகர்
குழல் இனிது யாழ் இனிது என்ப-குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்-தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். விளக்கம் ('குழல், யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச் சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)
English explanation
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,Who music of their infants' lisping lips have never heard
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.