அதிகாரம் / Chapter 7
திருக்குறள் 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.
பரிமேலழகர்
தம் மக்கள் அறிவுடைமை-தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது-பெரிய நிலத்து மன்னா நின்று உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். விளக்கம் (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)
English explanation
Their children's wisdom greater than their own confessed,Through the wide world is sweet to every human breast
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.