அதிகாரம் / Chapter 94
திருக்குறள் 933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிமேலழகர்
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப் போய்ப் பகைவர் கண்ணே தங்கும். விளக்கம் (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத் தொகை. ஆயம்-வடமொழித் திரிசொல். காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின், அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
English explanation
If prince unceasing speak of nought but play,Treasure and revenue will pass from him away
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.