அதிகாரம் / Chapter 94
திருக்குறள் 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
பரிமேலழகர்
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. விளக்கம் (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும் கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)
English explanation
Gaming brings many woes, and ruins fair renown;Nothing to want brings men so surely down
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.