அதிகாரம் / Chapter 75

திருக்குறள் 747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சூழவிட்டும், சூழவிடாதே ஒருபக்கமாகப் போர் செய்தும், அரணிலுள்ளாரைக் கீழறுத்தும் இம்மூன்றினாலும் கொள்ளுதற்கு அரியது அரணாவது.

பரிமேலழகர்

முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் - அகத்தோரை அவர் தௌ¢ந்தோரை விட்டுக் கீழறுத்துத் திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால் கொள்ளுதற்கு அரியதே அரணாவது. விளக்கம் (இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும் உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும் வாயாவாயின.)

English explanation

A fort should be impregnable to foes who gird it round,Or aim there darts from far, or mine beneath the ground

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.