அதிகாரம் / Chapter 75

திருக்குறள் 746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண். எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

பரிமேலழகர்

எல்லாப் பொருளும் உடைத்தாய - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக் காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது. விளக்கம் (அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமைபற்றி, 'நல்லாள்' என்றார்.)

English explanation

A fort, with all munitions amply stored,In time of need should good reserves afford

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).