அதிகாரம் / Chapter 125

திருக்குறள் 1248

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர்

விளக்கம் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)

English explanation

Thou art befooled, my heart, thou followest him who flees from thee;And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'

You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you.