அதிகாரம் / Chapter 125

திருக்குறள் 1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? விளக்கம் ('உள்ளம்' என் புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்ற வரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து அதனை ஒழி,' என்பதாம்.)

English explanation

My heart! my lover lives within my mind;Roaming, whom dost thou think to find

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?