அதிகாரம் / Chapter 125

திருக்குறள் 1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாஇன்னும் இழத்தும் கவின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

பரிமேலழகர்

'அவரை மறந்து ஆற்றல் வேண்டும்' என்பதுபடச் சொல்லியது. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்போம். விளக்கம் ("குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்" (குறுந். கடவுள் வாழ்த்து) என்புழிப்போல 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும், நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி 'நிறன் நிறையும் இழப்போம்,' என்பதாம்.)

English explanation

If I should keep in mind the man who utterly renounces me,My soul must suffer further loss of dignity

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.