அதிகாரம் / Chapter 51

திருக்குறள் 510

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பரிமேலழகர்

தேரான் தெளிவும்-அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்-ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும்-அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். விளக்கம் [வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்து விடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.]

English explanation

Trust where you have not tried, doubt of a friend to feel,Once trusted, wounds inflict that nought can heal

To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.