அதிகாரம் / Chapter 51

திருக்குறள் 509

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.

பரிமேலழகர்

யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக; தேர்ந்த பின் தேறும் பொருள் தேறுக- ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. விளக்கம் ['தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை, 'பொருள்' ஆகுபெயர்.]

English explanation

Trust no man whom you have not fully tried,When tested, in his prudence proved confide

Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.