அதிகாரம் / Chapter 52

திருக்குறள் 511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.

பரிமேலழகர்

நன்மையும் தீமையும் நாடி-அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து; நலம் புரிந்த தன்மையான்-அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்; ஆளப்படும். பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும். விளக்கம் [தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்த வழி, அதன் கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.]

English explanation

Who good and evil scanning, ever makes the good his joy;Such man of virtuous mood should king employ

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.