அதிகாரம் / Chapter 52

திருக்குறள் 512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக. பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.

பரிமேலழகர்

வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து; வளம் படுத்து - அப் பொருளால் செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான் - அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும ஆராய்ந்து நீக்கவல்லவன்; வினை செய்க - அரசனுக்கு வினை செய்க. விளக்கம் [வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள் ''இயற்றலும்'' (குறள். 385) என்புழி உரைத்தனவும்; உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன; ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செல்வார், சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.]

English explanation

Who swells the revenues, spreads plenty o'er the land,Seeks out what hinders progress, his the workman's hand

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).