அதிகாரம் / Chapter 52
திருக்குறள் 513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
பரிமேலழகர்
அன்பு - அரசன் மாட்டு அன்பும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும்; தோற்றம்-அவை செய்தற்கண் கலங்காமையும்; அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய; இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. விளக்கம் [இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏது ஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.]
English explanation
A loyal love with wisdom, clearness, mind from avarice free;Who hath these four good gifts should ever trusted be
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.