அதிகாரம் / Chapter 3
திருக்குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.
பரிமேலழகர்
உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐந்தும் காப்பான் - திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலங்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து - எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். விளக்கம் (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந் நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)
English explanation
He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.