அதிகாரம் / Chapter 75

திருக்குறள் 741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

பரிமேலழகர்

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற்செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித் தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது. விளக்கம் (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வௌவாமல் வைத்துச் செல்லவேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தால் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் பொற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

A fort is wealth to those who act against their foes;Is wealth to them who, fearing, guard themselves from woes

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.