அதிகாரம் / Chapter 75
திருக்குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம். தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.
பரிமேலழகர்
விளக்கம் (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலமும் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)
English explanation
A fort is that which owns fount of waters crystal clear,An open space, a hill, and shade of beauteous forest near
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.