அதிகாரம் / Chapter 119
திருக்குறள் 1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
பரிமேலழகர்
'பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்,' என்றவழிச் சொல்லியது. யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது இது வஞ்சனையாயிருந்தது. விளக்கம் (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத்தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)
English explanation
I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.