அதிகாரம் / Chapter 69

திருக்குறள் 681

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.

பரிமேலழகர்

அன்பு உடைமை - தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின் கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு - தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். விளக்கம் [முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம். வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சேர்ந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.]

English explanation

Benevolence high birth, the courtesy kings love:-These qualities the envoy of a king approve

The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.