அதிகாரம் / Chapter 58
திருக்குறள் 576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர். இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.
பரிமேலழகர்
கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணொடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர். விளக்கம் ('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது, மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், "மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய்" (புறத்திரட்டு 1555 முத்தொள்.) என்பதனானும் அறிக.
English explanation
Whose eyes 'neath brow infixed diffuse no rayOf grace; like tree in earth infixed are they
They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).