அதிகாரம் / Chapter 58

திருக்குறள் 577

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.

பரிமேலழகர்

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்-கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. விளக்கம் (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். 'உம்மை' இறந்தது தழீஇய எச்சஉம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)

English explanation

Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.