அதிகாரம் / Chapter 42

திருக்குறள் 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.

பரிமேலழகர்

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். விளக்கம் (செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)

English explanation

Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.