அதிகாரம் / Chapter 93
திருக்குறள் 927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.
பரிமேலழகர்
கள் ஒற்றிக் கண் சாய்பவர்-கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்: உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்-உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். விளக்கம் (உள்ளூர்- ஆகுபெயர். 'உண்டு' என்பது அவாய் நிலையான வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
English explanation
Who turn aside to drink, and droop their heavy eye,Shall be their townsmen's jest, when they the fault espy
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.