அதிகாரம் / Chapter 45
திருக்குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.
பரிமேலழகர்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை 'இவர் நமக்குச் சிறந்தார்' என்று ஆளும்அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்? விளக்கம் (தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம் தன்மையாவது: தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)
English explanation
What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?