அதிகாரம் / Chapter 88
திருக்குறள் 874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.
பரிமேலழகர்
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்து கொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது; பெருமையுள்ளே தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. விளக்கம் (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல்: அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.) -.
English explanation
The world secure on his dexterity depends,Whose worthy rule can change his foes to friends
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.