அதிகாரம் / Chapter 130

திருக்குறள் 1297

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். விளக்கம் (மாணாமை - ஒருநிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந்தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும மறந்தேன்,' என்றாள்.)

English explanation

Fall'n 'neath the sway of this ignoble foolish heart,Which will not him forget, I have forgotten shame

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.