அதிகாரம் / Chapter 130

திருக்குறள் 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது. இது தலைமகள். நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள்ளாதே, யான்தனிப்பட்டால் நலிவதாக இருந்தது. நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னோடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத் தின்பது போன்று துன்பம் செய்தற்கே. விளக்கம் ('என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே; இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று,' என்பதாம்.)

English explanation

My heart consumes me when I ponder lone,And all my lover's cruelty bemoan

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.