அதிகாரம் / Chapter 9

திருக்குறள் 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

பரிமேலழகர்

சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று. விளக்கம் (சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

Though food of immortality should crown the board,Feasting alone, the guests without unfed, is thing abhorred

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.