அதிகாரம் / Chapter 9
திருக்குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
பரிமேலழகர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை. விளக்கம் (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
English explanation
Each day he tends the coming guest with kindly care;Painless, unfailing plenty shall his household share
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.