அதிகாரம் / Chapter 9
திருக்குறள் 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
பரிமேலழகர்
செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். விளக்கம் (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
English explanation
With smiling face he entertains each virtuous guest,'Fortune' with gladsome mind shall in his dwelling rest
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.